நம்பிக்கையில்லா தீர்மானம்: தாய்லாந்து பிரதமர் வெற்றி

நம்பிக்கையில்லா தீர்மானம்: தாய்லாந்து பிரதமர் வெற்றி

1 mins read
b13a8203-6b5e-47f7-aacb-5c0962f6e34c
-

பேங்காக்: தாய்லாந்து பிரதமருக்கு எதிராக நான்காவது முறையாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான்-ஒச்சா வரும் மார்ச் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.

இன்னும் 11 மாதங்களில் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர்மீது நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்திற்கு எதிராக 256 பேர் வாக்களித்தனர், 206 பேர் ஆதரவாக வாக்களித்தனர், ஒன்பது செல்லாத வாக்குகள் பதிவாகின.

மொத்தமுள்ள

477 நாடாளுமன்ற உறுப்பினர்களில்

239 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், பிரதமர் பதவி விலக நேரிட்டிருக்கும்.

சென்ற 2014ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சிக்குப் பிறகு, நாட்டின் தலைவராக தொடர்ந்து நீடிக்கிறார் பிரயுத் சான்-ஒச்சா.