உக்ரேகின் ஒடீசா கப்பல் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஐக்கிய நாட்டு பொதுச்செயலாளர் முன்னிலையில் துருக்கி நாட்டில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், தெற்கு உக்ரேன் துறைமுகமான ஒடீசா மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
ஒடீசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரேன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரேன் ராணுவ செய்தித் தொடர்பாளர் சேர்கி ப்ராட்சுக் தெரிவித்துள்ளார்.

