குரங்கம்மை பரவல்: சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு

குரங்கம்மை பரவல்: சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு

1 mins read
f44903b5-f866-48cd-8900-3031997a9161
-

ஜெனீவா: உலகளவில் குரங்கம்மை நோய் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், குரங்கம்மை பரவலை அனைத்துலுக அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வல்லுநர் குழு உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்துள்ளார்.

"ஆணுடன் பாலியில் உறவில் ஈடுபடும் ஆண்களிடையே இந்நோய் அதிகம் காணப்படுகிறது, குறிப்பாக பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 16,000 பேர் இந்நோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்ற இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.