குரங்கம்மை: சுகாதார அவசரநிலை

குரங்கம்மை: சுகாதார அவசரநிலை

1 mins read
0f15109b-3012-4e7f-ada0-0929a2f8721b
-

ஜெனிவா: உல­க­ள­வில் குரங்­கம்மை நோய் வேக­மாக அதி­க­ரித்து வரும் நிலை­யில், குரங்­கம்மை பர­வலை அனைத்­துலுக அள­வி­லான பொது சுகா­தார அவ­சர நிலை­யாக பிர­க­ட­னம் செய்­துள்­ளது உல­க சுகா­தார நிறு­வ­னம்.

குரங்கு அம்மை நோய் தொடர்­பாக வல்­லு­நர் குழு உறுப்­பி­னர்­கள் உட­னான ஆலோ­ச­னைக்­குப் பிறகு இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக உல­க சுகா­தார நிறு­வ­னத்­தின் பொது இயக்­கு­நர் டெட்­ரோஸ் அதா­னோம் கெப்­ரே­யஸ் அறி­வித்­துள்­ளார்.

"ஆணு­டன் பாலி­யில் உற­வில் ஈடு­படும் ஆண்­க­ளி­டையே இந்­நோய் அதி­கம் காணப்­ப­டு­கிறது, குறிப்­பாக பல­ரு­டன் பாலி­யல் உற­வில் ஈடு­ப­டு­ப­வர்­கள் இத­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்றார் அவர்.

நடப்பு ஆண்­டில் இது­வரை உல­கம் முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 16,000 பேர் இந்­நோய் பர­வ­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தியா, அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து உள்­ளிட்ட 75க்கும் மேற்பட்ட நாடு­களில் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.