கியவ்: ரஷ்யாவின் பிடியில் உள்ள கெர்சான் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக உக்ரேனியப் படைகள் முன்னேறி வருவதாக அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கெர்சான் பகுதியில் கடும் சண்டை நடப்பதாக பிரிட்டிஷ் தற்காப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆற்றின் மேற்கு கரையோரத்தில் உள்ள ரஷ்யப் படைகள் அதிக ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
எதிர்த்தாக்குதல் குறித்து முன்பே அறிவித்த உக்ரேன், கெர்சான் பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டது.
டினிப்ரோ ஆற்றின் பாலங்களைக் குறிவைத்து உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பீரங்கித் தாக்குதலில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ள டர்யிவெஸ்கி பாலம் தாக்கப்பட்டது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செர்சானின் அன்டோனிவெஸ்கி பாலமும் தாக்கப்பட்டது. அமெரிக்கா வழங்கிய பீரங்கிகளைக் கொண்டு உக்ரேன் இத்தாக்குதல்களை மேற்கொள்வதாக தெரிகிறது.
படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்திலேயே கெர்சான் பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது.

