பிலிப்பீன்சில் துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

பிலிப்பீன்சில் துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

1 mins read
08874e69-e385-46ff-9c54-d6b96b345e53
-

மணிலா: பிலிப்­பீன்­சின் பல்­க­லைக்­க­ழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டில் முன்­னாள் மேயர் உட்­பட மூன்று பேர் கொல்லப்­பட்­ட­தாகக் காவல்­துறை தெரி­வித்­தது.

தெற்கு லாமி­டன் நக­ரின் முன்­னாள் மேயரான திரு­மதி ரோஸ் ஃபுரிகே­யைக் கொலை செய்ய, இந்தத் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தாக நம்பப்படுகிறது என்றார் குவென்சான் நகர காவல்­து­றைத் தலை­வர் ரெமுஸ் மெடினா கூறி­னார்.

பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்­து­கொள்ள சென்­றி­ருந்த ஒரு தாயும் பட்டம் பெறுவதற்காகச் சென்றிருந்த அவ­ரது மகளும் காய­ம­டைந்­தனர். அவர்­க­ளின் உத­வி­யா­ளர் ஒரு­வ­ரும் பாது­கா­வல் அதி­காரி ஒரு­வ­ரும் துப்­பாக்­கிச் சுட்­டில் மாண்­டு­விட்­ட­னர்.

பல்­க­லைக்­க­ழக பாது­கா­வல் அதி­காரி துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில், சந்­தேக நபர் காய­ம­டைந்­தார்.

சம்பவத்திற்குப் பிறகு, காரில் தப்­பி­யோட முயன்ற சந்­தேக நபரை, காவல்­து­றை­யி­னர் துரத்­திச் சென்று பிடித்­த­னர். அவ­னி­டம் விசா­ரணை நடத்தப்படுகிறது.

அவ­னி­டம் இரண்டு துப்­பாக்­கி­கள் இருந்­த­த­தா­க­வும் மேய­ரைக் கொலை செய்­யும் நோக்­கத்­தோடு அவன் இருந்­த­தாகத் தெரி­கிறது என்­றார் மெடினா.

குவென்­சான் நக­ரில் உள்ள மணிலா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேற்று பிற்­ப­கல் இந்தச் சம்­ப­வம் நடந்­தது. அப்­போது, சட்­டக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்­கான பட்­ட­மளிப்பு விழா நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது.