ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் 5,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை புதிய உச்சம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் புதிய திரிபுகளால் பாதிக்கப்ப்டட 5,450 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலைமையைக் கையாள ஆஸ்திரேலிய மருத்தவமனைகள் திண்டாடுகின்றன. கிருமித் தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது.
கிருமித் தொற்றுக்கு எதிராக ஆக அதிக மக்கள்தொகை தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் அடங்கும். இருப்பினும், 'பிஏ.4', 'பிஏ.5' ரகக் கிருமிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்றும்.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 9.13 மில்லியன் தொற்று சம்பவங்களும், 11,181 பேர் தொற்று பாதிப்பால் மாண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

