18 மருத்துவ ஊழியர்கள் மரணம்

18 மருத்துவ ஊழியர்கள் மரணம்

1 mins read
da8aac60-aac4-4b58-8935-6d299d59cda4
டோனெட்ஸ்க் வட்டாரத்தில் உள்ள பாக்முட் பகுதியில் காயமடைந்த ஒருவருடன் மருத்துவப் பணியாளர்கள்.படம்: ஏஎஃப்பி -

கியவ்: உக்­ரே­னில் தொட­ரும் போரால் முன்­கள மருத்­துவ உத­வி­யா­ளர்­களும் மருத்­து­வ­ம­னை­களில் காய­ம­டைந்­தோ­ருக்கு சிகிச்­சை­யளிக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது. கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி­யன்று ரஷ்யா உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தற்­குப் பிறகு 18 மருத்­துவ உதவி­யா­ளர்­கள் உயி­ரி­ழந்­த­தா­க­வும் 50க்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­த­தா­க­வும் அமைச்சு தெரி­வித்தது.

மேலும், மருத்­து­வச் சேவை­களை வழங்­கும் 123 நிலை­யங்­கள் ரஷ்­யத் தாக்­கு­தல்­க­ளால் அழிக்­கப்­பட்­டுள்­ளன. சேத­ம­டைந்த 746 நிலை­யங்­களை சரி­செய்­ய­வேண்­டிய நிலை உரு­வெ­டுத்­துள்­ளது.

உக்­ரே­னின் மருத்­து­வக் கட்­ட­மைப்பை அழிக்­கும் நோக்­கு­டன் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­படுவதாக சுகா­தார அமைச்சு ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

ஆறா­வது மாதம் வரை நீடித்து­வரும் போரில் பொது­மக்­கள் இருக்­கும் பகு­தி­க­ளைத் தாக்க ரஷ்யா தயங்­கி­ய­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், ராணுவ ரீதி­யான தாக்­கு­தல்­களையே தாங்­கள் மேற்­கொண்­டுள்­ள­தாக மாஸ்கோ கூறி வரு­கிறது.

இதற்கிடையே, உக்ரேனின் ஆயுதப் படையைச் சேர்ந்த 92 பேர் மீது மாஸ்கோ வழக்கு தொடர்ந்துள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழுத் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிக்கின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மனிதர்களின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக திரு பாஸ்ட்ரிக்கின் சொன்னார்.

உக்ரேன் போரால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் மருத்துவ ஊழியர்கள்