செய்லர்ஸ், தெம்பனிஸ் அணிகள் மீது குற்றச்சாட்டுகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து அணிகளான லயன் சிட்டி செய்லர்ஸ், தெம்பனிஸ் ரோவர்ஸ் ஆகியவற்றின் மீது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. செய்லர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் கிம் டோ-ஹூன், தெம்பனிஸ் ரோவர்ஸ் அணியின் துணை பயிற்றுவிப்பாளர் முஸ்டாஃபிக் ஃபாஹ்ருதீன் ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும். நேற்று முன்தினம் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்திற்குப் பிறகு மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு விறுவிறுப்பான வெற்றி
போர்ட் ஆஃப் ஸ்பெயின் (ட்ரினிடாட் அண்ட் டொபேகோ): இரண்டே பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வென்றுள்ளது இந்தியா. இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது 312 ஓட்டங்களை எடுத்த இந்தியா. முதலில் பந்தடித்த மேற்கு இந்தியத் தீவுகள் எட்டு விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்களை எடுத்தது. வெற்றியைத் தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரை 2-0 எனும் ஆட்டக்கணக்கில் வென்றது இந்தியா.

