பல ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனையை நிறைவேற்றிய மியன்மார்

1 mins read
30c5f292-460a-4996-bdc0-d04304af333f
-

யங்­கோன்: மியன்­மார் பல ஆண்டு­களுக்­குப் பிறகு மீண்­டும் சில­ருக்கு மரண தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ளது.

பயங்­க­ர­வா­தச் செயல்­களை மேற்­கொள்ள துணை போன­தா­கச் சொல்லி நான்கு ஜன­நா­ய­கக் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு மியன்­மார் மரண தண்­டனை விதித்­தி­ருந்­தது. இப்­போது தண்டனை நிறை­வேற்றப்­பட்டது பல தரப்­பி­ன­ரிடையே பெரும் கண்­ட­னத்­திற்கு உள்­ளாகி­யி­ருக்­கிறது.

மியன்­மார் ராணு­வத்தை எதிர்த்து சண்­டை­யிட அர­சாங்க எதிர்ப்­புப் படை­க­ளுக்கு உத­வி­யதாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட நான்கு கிளர்ச்­சி­யா­ளர்­கள் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. மியன்­மா­ரின் ராணு­வம் சென்ற ஆண்டு அந்­நாட்­டில் வலுக்­கட்­டா­ய­மாக ஆட்சி­யைக் கைப்­பற்­றி­யது.

ஜிமி என்­ற­ழைக்­கப்­படும் மியன்­மா­ரின் ஜன­நா­ய­கப் போராளி கியாவ் மின் யு, இசைக் கலை­ஞ­ரும் முன்­னாள் அர­சி­யல்­வா­தி­யு­மான ஃபியோ ஸெயா தாவ் ஆகி­யோர் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டோ­ரில் அடங்­கு­வர். 53 வயது கியாவ் மின் யுவும் 41 வயது ஸெயா தாவும் தங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னைக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­த­னர்.

அந்த முயற்­சி­யில் இரு­வரும் தோல்­வி­ய­டைந்­த­னர். ஹ்லா மியோ ஆவ்ங், துரா ஸாவ் ஆகி­யோர் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட இதர இரு­வர்.

நால்­வ­ரின் வழக்கு விசா­ரணை கடந்த ஜன­வரி மாதம் முதல் ஏப்­ரல் மாதம் வரை ரக­சி­ய­மாக நடை­பெற்­றது.

மரண தண்­டனை நிறை­வேற்றப்­பட்­டதை மியன்­மார் அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான ஊட­கம் நேற்று தெரி­வித்­தது. ராணுவ அர­சாங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வ­ரும் பின்­னர் அதை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட நேரம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இதற்கு முன்பு மியன்­மா­ரின் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்.