லாஸ் ஏஞ்சலிஸ் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

லாஸ் ஏஞ்சலிஸ் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

1 mins read
b95ecad1-932d-4e00-a893-c07cca1aab26
-

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ரில் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டுத் தாக்­கு­த­லில் குறைந்­தது இரு­வர் மாண்­ட­னர். வேறு பலர் காய­ம­டைந்­த­னர்.

அச்­சம்­ப­வம் லாஸ் ஏஞ்­ச­லிசில் உள்ள 'பெக் பார்க்' எனும் பூங்­கா­வில் நேர்ந்­தது.

அங்கு நடை­பெற்ற அதி­கா­ர­பூர்­வ­மற்ற வாகன நிகழ்ச்சி ஒன்­றில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்டது. எழு­வர் மருத்­து­வ­ம­னை­களுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக லாஞ் ஏஞ்­ச­லிஸ் நகர தீய­ணைப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

அவர்­களில் இரு­வர் பின்­னர் மர­ண­ம­டைந்­த­னர்.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி சந்­தேக நபர்­கள் குறித்த தக­வல் எதை­யும் காவல்­துறை வெளி­யி­ட­வில்லை.அண்­மைக் கால­மாக அமெ­ரிக்­கா­வில் அடுத்­த­டுத்து பல துப்­பாக்­கிச் சூட்­டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.