சீனாவில் மக்கள்தொகை குறையக்கூடும்

சீனாவில் மக்கள்தொகை குறையக்கூடும்

1 mins read
fcf7b2a0-6838-4b44-bd38-e0366d43ff52
-

ஹாங்­காங்: சீனா­வின் மக்­கள்­தொகை 2025ஆம் ஆண்­டுக்­குள் குறையத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக குளோ­பல் டைம்ஸ் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது. மூத்த சுகா­தார அதி­காரி ஒரு­வர் அவ்­வாறு சொன்­ன­தாக குளோ­பல் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

சீனா­வில் சென்ற ஆண்டு பிறந்த குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை பல ஆண்­டு­களில் காணாத அளவு குறைவாக இருந்ததென நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்ட புள்ளி விவ­ரங்­களில் தெரி­ய­வந்­தது. இந்­நிலை அந்­நாட்­டில் பல மாநி­லங்­க­ளுக்­குப் பொருந்­தும்.

சீனா­வில் பெண்­கள் மூன்று பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள வகை­செய்ய சென்ற ஆண்டு சட்­டத்­தில் மாற்­றங்கள் கொண்­டு­வரப்­பட்­டன. ஆனால் அது அதிகம் பல­ன­ளிக்­கா­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.