இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளும், அறுவை சிசிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களும் முற்றிலும் தீர்ந்துவிட்டன.
பெட்ரோல் பற்றாக்குறையால் மருத்துவர்களும், தாதிகளும் வேலைக்கு செல்லமுடியவில்லை. இதனால் மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இலங்கையில் 85 விழுக்காடு மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் இறக்குமதி செய்யபடுகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அரசாங்கத்தால் மருந்துகள் வாங்க முடியவில்லை.
குழந்தைகளுக்கான மருந்து, வலி நிவாரண மருந்து, நோய் எதிர்ப்பு மருந்து ஆகியவை முற்றிலும் தீர்ந்துவிட்டன. மற்ற மருந்துகளின் விலை கடந்த மூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.
நாட்டின் பொது சுகாதாரச் சேவை குறித்த ஆக அண்மைய நிலைமையைப் பற்றி அரசாங்க அதிகாரிகள் கருத்துரைக்கவில்லை. ஆனால் இது மோசமான நிலையில் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான இலங்கை ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
இந்நிலை தொடர்ந்தால், பல குழந்தைகள் மடியும் என்றும் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

