பங்ளாதேஷில் ஆண்டுதோறும் 14,000க்கும் அதிகமான சிறுவர்கள் நீரில் மூழ்கி மடிகின்றனர். ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் உயிரிழப்பதற்கு இது இரண்டாவது காரணமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் குழந்தை நிதியமும் பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் நீரில்மூழ்கி மடிவதைத் தடுக்க கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டன.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 230,000 பேர் நீரில்மூழ்கின்றனர். இதில் பத்தில் ஒன்பது சம்பவங்கள் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்படுகின்றன. ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களே நீரில் மூழ்கும் ஆபத்தில் உள்ளனர்.
பங்ளாதேஷில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் வளரும் சிறார் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது

