செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
203391c3-33a8-4ec7-bd7a-36f46fe19d99
-

விடோடோ-ஜின்பிங் சந்திப்பு

சீனப் பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங்கைச் (வலது) சந்தித்தார் இந்தோனீசிய அதிபர் விடோடோ. படம்: இபிஏ

பெய்ஜிங்: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ மூன்று கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த மூன்று நாள் பயணத்தில் முதலில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்த பிறகு, ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் செல்கிறார்.

கிருமிப் பரவலுக்குப் பிறகு முதல் தலைவராக விடோடோ, ஜின்பிங்கை நேற்று நேரில் சந்தித்தார். இருதரப்பு உறவு, வட்டார, அனைத்துலகப் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

காட்டுத் தீயின் வேகம் குறைந்தது

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். வரும் சனிக்கிழமைக்குள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

இருப்பினும், காட்டுத் தீ மீண்டும் வேகமெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாண்டின் ஆகப்பெரிய காட்டுத் தீயாக இது கருதப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 6,800 ஹெக்டேர் பரப்பளவு நிலம் தீயில் கருகிவிட்டது.

நன்கொடை பெறவில்லை: மகாதீர்

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் அல்ட்ரா கிரனா எனும் யுகேஎஸ்பி நிறுவனத்திடம் இருந்து பெர்சத்து கட்சிக்கு அரசியல் நன்கொடை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மறுத்துள்ளார்.

"நான் எந்தப் பணமும் பெறவில்லை. ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், ஏற்றுக்கொள்கிறேன். வாய்பேச்சாக எதையும் சொல்லவேண்டாம்," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் சொன்னார். இதுகுறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கும் தான் தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

திங்கட்கிழமையன்று முன்னாள் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையின்போது, அப்போதைய பெர்சத்து கட்சித் தலைவரான மகாதீருக்கு, அவரது மருமகன் மூலம் பணம் கொடுக்கப்பட்டதாக யுகேஎஸ்பி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார்.