சவூதி அரேபியாவில் உருவாகிறது 'நியோம்' பிரம்மாண்ட நகரம்

சவூதி அரேபியாவில் உருவாகிறது 'நியோம்' பிரம்மாண்ட நகரம்

1 mins read
1aec91ec-be02-4433-aeac-968f8294d53c
-

சவூதி அரேபியாவில் 9 மில்லியன் மக்கள் வசிக்கக்கூடிய பிரம்மாண்ட நகரமாக உருவாகிறது 'நியோம்'. கிட்டத்தட்ட 500 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகும் இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கட்டடங்கள் செங்குத்து அடுக்குகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மாசற்ற நகரமாக உருவாகும் இதில் சாலைகள், கார்கள் கிடையாது. எனவே, முற்றிலும் கரியமில வாயு இல்லாத நகரமாக இது உருவாகிறது. நியோம் நகரம், நியூயார்க்கைவிட 33 மடங்கு பெரியதாக இருக்கும் என தெரிவித்துள்ள சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், இது ஒரு நாகரிகப் புரட்சியாக இருக்கும் எனவும் உலகம் முழுவதும் உள்ள பல மக்களின் வாழ்விடமாக மாறும் என்றும் சொன்னார். படம்: ஏஎஃப்பி