வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு இலங்கை அனுமதி

கொழும்பு: இலங்­கை­யில் நில­வும் கடும் எரி­பொ­ருள் பற்­றாக்­கு­றைக்கு மத்­தி­யில், அதை இறக்­கு­மதி செய்­வ­தற்கு வெளி­நாட்டு எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

"பெட்­ரோ­லிய பொருள்­களை இறக்­கு­மதி செய்­ய­வும் அதை விநி­யோ­கிக்க, விற்­பனை செய்­ய­வும் வெளி­நாட்டு எண்­ணெய் நிறு­வனங்­க­ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது," என்று எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சனா விஜேசே­கர தெரி­வித்தார்.

இப்­போ­தைக்கு இலங்­கை­யில், இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம், சிலோன் பெட்­ரோ­லிய நிறு­வ­னம் ஆகிய இரண்டு எண்­ணெய் நிறு­வனங்­கள்­தான் உள்­ளன.

1,190 எரி­பொ­ருள் நிரப்­பும் நிலை­யங்­களால் நாட்­டின் 80 விழுக்­காட்டு தேவை­யைக் கட்டுப்­ப­டுத்­தும் சிலோன் பெட்­ரோ­லி­யம் நிறு­வ­னம், அதன் எரி­பொ­ருள் நிலை­யங்­கள் போன்றவற்­றின் குறிப்­பிட்ட ஒரு பகு­தியை, புதிய எண்­ணெய் நிறு­வ­னங்­களுக்­குக் கொடுக்­கும் என்றது அர­சாங்­கம்.

சீனாவிடம் வர்த்தக உதவி கோரும் இலங்கை

இதற்­கி­டையே, இலங்­கை­யின் வர்த்­த­கம், முத­லீடு, சுற்­று­லாத்­து­றைக்கு உத­வு­மாறு சீனா­வி­டம் இலங்கை கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாக சீனா­விற்­கான இலங்கை தூதர் தெரி­வித்­தார். இலங்­கைக்கு 4 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­கள் அவ­சர நிதி வழங்­கு­வது குறித்­தும் சீனா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

இலங்­கை­யின் தேயிலை, மசாலா பொருள்­கள், ஆடை­களை சீன நிறு­வ­னங்­கள் அதி­க­ள­வில் வாங்க அந்­நாட்டு அரசு கேட்­டுக்­கொள்­ள­வேண்­டும் என­வும் இறக்­கு­மதி விதி­களை சீனா எளி­தாக்­க­வேண்­டும் என்றும் அவர் கூறி­னார்.

மருந்துகள் இல்லை

இலங்­கை­ மருத்து­வ­ம­னை­களில் உயிர்­காக்­கும் மருந்­து­களும் அறுவை சிசிச்­சைக்கு தேவைப்­படும் உப­க­ர­ணங்­களும் முற்­றி­லும் தீர்ந்­து­விட்­டன. பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கித்­தவிக்­கும் இலங்­கை­யில் அந்­நி­யச் செலா­வணி பற்­றாக்­குறை காரணமாக மருந்­து­கள் வாங்க முடி­ய­வில்லை.

குழந்­தை­க­ளுக்­கான மருந்து, வலி நிவா­ரண மருந்து, நோய் எதிர்ப்பு மருந்து ஆகி­யவை முற்­றி­லும் தீர்ந்­து­விட்­டன. மற்ற மருந்து­க­ளின் விலை கடந்த மூன்று மாதங்­களில் நான்கு மடங்கு அதி­க­ரித்­துள்­ளன.

நாட்­டின் பொது சுகா­தா­ரச் சேவை குறித்த ஆக அண்­மைய நிலை­மை­யைப் பற்றி அரசாங்க அதி­கா­ரி­கள் கருத்­து­ரைக்­க­வில்லை. ஆனால் அது மோச­மான நிலையில் இருப்­ப­தாக ஐநாவின் இலங்கை ஒருங்­கி­ணைப்­பாளர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!