தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோ நகரில் சென்ற 2008ஆம் ஆண்டு ஏழுப் பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவர், நேற்று தூக்கிலிடப்பட்டதாக உள்ளூர் ஊடக செய்தி கூறுகிறது. இதுகுறித்து அந்நாட்டின் நீதித்துறை உடனடியாக எதுவும் உறுதிப்படுத்தவில்லை.
2008ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, கேட்டோ என்ற அந்த ஆடவர், பாதசாரிகள்மீது வாகனத்தைச் செலுத்திய பிறகு, அங்கிருந்தவர்களைக் கத்தியால் குத்தினான்.
"நான் கொல்வதற்காகதான் வந்தேன். யாரைக் கொல்கிறேன் என்று கவலையில்லை," என்று அவன் விசாரனையின்போது கூறினான்.

