மலேசியாவில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை (27 ஜூலை) மதியம் 3.02 மணிக்குள் மின்தடை சரிசெய்யப்பட்டது.
முன்னதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் உள்பட மலேசியாவின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தலைநகர் கோலாலம்பூர் இருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பங்சார், செராஸ், ஷா அலாம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்களிலும் மின்தடை ஏற்பட்டதாக மலேசியர்கள் சிலர் டுவிட்டரில் கூறினர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முக்கிய முனையம் மின்தடையால் பாதிக்கப்பட்டது.

