சம்பளப் பிரச்சினை காரணமாக பிரிட்டிஷ் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் அங்கு ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரிட்டனில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில் சேவைகள் செயல்படுகின்றன.
சில பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு ரயில்வே துறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜூன் மாதம் இதேபோன்ற வேலைநிறுத்தத்தால் மூன்று நாள்கள் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பிரிட்டனில் விலைவாசி 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

