'விலங்கு சந்தையில் இருந்து கொவிட்-19 பரவியிருக்கலாம்'

'விலங்கு சந்தையில் இருந்து கொவிட்-19 பரவியிருக்கலாம்'

1 mins read
6f3fcc6d-c532-4e3e-9ad9-00638a9a2e9f
-

வா‌ஷிங்­டன்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு சீனா­வின் வூஹான் நக­ரில் உள்ள விலங்கு சந்­தையே கார­ணம் என்று இரண்டு ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

கிரு­மிப் பர­வல் சீனா­வின் ஹுனான் சந்­தைக்­குள் மட்­டுமே இருந்­த­தை­யும் நவம்­பர் 2019க்கு முன்பு மனி­தர்­க­ளி­டம் பர­வி­யிருப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் இல்லை என்­ப­தை­யும் அந்த ஆய்­வு­கள் உறு­திப்­ப­டுத்­தின.

இந்த ஆய்வு முடி­வு­கள் பிர­பல சஞ்­சி­கை­க­ளி­லும் வெளி­யி­டப்­பட்டுள்­ளன.

எனவே, வூஹான் விலங்­குச் சந்­தை­யில் இருந்து கிரு­மி பர­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்­று­ தாம் எண்ணு­வ­தாக சொன்­னார் ஆய்வை வழிநடத்திய அரி­சோனா பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்.

முன்பு இவர், வூஹான் ஆய்­வகத்­தில் இருந்து கிருமி கசிந்து­இருக்­க­லாம் என்று கூறி­னார். ஆய்வு முடி­வு­க­ளுக்­குப் பிறகு தனது எண்­ணத்தை அவர் மாற்றிக்­கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, வூஹான் நக­ரில் மீண்­டும் கிரு­மிப் பர­வல் தலை­தூக்­கி­யுள்­ள­தை­ய­டுத்து, அங்கு வர்த்­த­கங்­கள், பொதுப் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டு உள்ளன.

மக்­கள் பெரு­ம­ள­வில் ஒன்று கூடு­வ­தற்­கும் உண­வ­கங்­களில் உண­வ­ருந்­த­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. பொழு­து­போக்­குக் கூடங்­கள் போன்­றவை மூடப்­பட்­டுள்­ளன. மூன்று நாள்களுக்கு இத்தடை நீடிக்கும்.