கார்கிவ் வட்டாரத்தில் ர‌ஷ்யா தொடர் ஏவுகணைத் தாக்குதல்

கார்கிவ் வட்டாரத்தில் ர‌ஷ்யா தொடர் ஏவுகணைத் தாக்குதல்

1 mins read
24e29158-ed1e-4526-b796-7d0823966994
-

உக்ரேனின் கார்கிவ், அதைச் சுற்றியுள்ள நகரங்களில்

ர‌ஷ்யப் படைகள் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இத்தாக்குதலில், ர‌ஷ்யப் படைகள் எஸ்-300 ரக விமான எதிர்ப்பு ‌ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக உக்ரேன் சொன்னது. ர‌ஷ்யாவின் பெல்கரேட் பகுதியில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. அதில், கார்கிவ் நகருக்கு அருகேயுள்ள சுஹிவ் பகுதியில் சமூக, கலாசார மையக் கட்டடம் சேதமடைந்தது. கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

படம்: இபிஏ