பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

1 mins read
a90a69d9-7aad-403a-9532-d04a126d63af
-

லண்­டன்: சம்­ப­ளப் பிரச்­சினை கார­ண­மாக பிரிட்­டி‌ஷ் ரயில்வே ஊழி­யர்­கள் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­ட­தால், அங்கு ரயில் போக்­கு­வ­ரத்து நேற்று பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது.

இந்த 24 மணி நேர வேலை­நிறுத்­தத்­தில், கிட்­டத்­தட்ட 40,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். இத­னால், பிரிட்­ட­னில் மிக­வும் குறைந்த எண்­ணிக்­கை­யி­லேயே ரயில் சேவை­கள் செயல்­பட்­டன. சில பகு­தி­க­ளுக்கு ரயில் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டது.

அத்­தி­யா­வ­சி­யப் பய­ணங்­களை மட்­டுமே மேற்­கொள்­ளு­மாறு மக்­க­ளி­டம் ரயில்­வே துறை கேட்­டுக்­கொண்­டது.

"ஊதிய உயர்வு, வேலை பாது­காப்பு, நல்ல வேலைச் சூழல் ஆகி­ய­வற்­றுக்­காகப் போரா­டு­வ­தில் ஊழி­யர்­கள் உறு­தி­யாக உள்­ள­னர்," என்று ஊழி­யர் சங்­கம் ஒன்­றின் பொதுச் செய­லா­ளர் மிக் லிஞ்ச் தெரி­வித்­தார். ஊதிய உயர்வு குறித்து எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என்­றார் அவர்.

நான்கு விழுக்­காடு சம்­பள உயர்வு அளிக்­கப்­படும் என்­றும் அதன் பிறகு மேற்­கொள்­ளப்­படும் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப மேலும் நான்கு விழுக்­காடு உயர்வு அளிக்­கப்­படும் என்றும் முந்­திய பேச்­சு­வார்த்­தை­யில் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஜூன் மாதத்தில் இதேபோன்ற வேலைநிறுத்தம் காரணமாக, மூன்று நாள்கள், ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

பிரிட்­ட­னில் விலை­வாசி 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு உயர்ந்­துள்­ளது. இவ்­வாண்­டின் இறு­தி­யில் அது இரட்டை இலக்­கத்தை எட்­டக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.