உடைந்த ராக்கெட் பாகங்கள் பூமியை நோக்கி வருகின்றன

உடைந்த ராக்கெட் பாகங்கள் பூமியை நோக்கி வருகின்றன

1 mins read
9eafbb6b-013f-434c-8305-e1403d545baf
-

பெய்­ஜிங்: விண்­வெ­ளிக்கு அனுப்பப்­பட்ட சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்­கள் பூமியை நோக்கி வந்து ­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அது எங்கு வேண்டுமானாலும் விழக்­கூ­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஜூலை 24ஆம் தேதி­யன்று லாங் மார்ச் 5பி ராக்கெட்டை அனுப்­பி­யது சீனா.

அது கட்­டுப்பாட்டை இழந்து, மீண்­டும் பூமியை நோக்கி வந்­து­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் வரும் ஜூலை 31ஆம் தேதி வாக்­கில் அது பூமிக்­குள் நுழை­யும் என்­றும் கலி­ஃபோர்­னி­யா­வில் உள்ள ஏரோஸ்­பேஸ் நிறு­வ­னம் சொன்­னது.

அமெ­ரிக்கா, ஆப்­பி­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பிரே­சில், இந்­தியா, தென்­கி­ழக்­கா­சிய நாடு­களின் பகு­தி­களில் ஏவு­க­ணை­யின் பாகங்­கள் விழக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

மக்கள் நெரிசல் அதி­கமாக உள்ள பகுதிகளில் ராக்கெட் பாகங்கள் விழுமோ என்ற கவலைக்கு மத்­தி­யில், பூமியை நோக்கி வரும் ராக்கெட் பாகங்­களின் நிலை குறித்து சீனா தொடர்ந்து கண்­கா­ணித்து வரு வதா­க­வும் உட­னுக்­கு­டன் அது­குறித்த தக­வல்­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தா­க­வும் சீன வெளி­யு­றவு அமைச்சு நேற்று சொன்­னது.

பெரும்­பா­லான பாகங்­கள் பூமிக்­குள் நுழை­யும்­போதே எரிந்து­வி­டும் என்­ப­தால், பூமிக்கு ஆபத்து ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு குறைவு என்று வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் ஜாவ் லிஜி­யன் சொன்­னார்.