இந்தோனீசியா-ஜப்பான் ராணுவப் பயிற்சி

இந்தோனீசியா-ஜப்பான் ராணுவப் பயிற்சி

1 mins read
8976614f-86e1-4034-87c7-7add6fabb59d
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, தமது ஜப்பானிய பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிடாவைச் சந்தித்தார். படம்: இபிஏ -

தோக்­கியோ: இந்­தோ­னீ­சி­யா­வில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள ராணு­வப் பயிற்­சி­யில் முதல்­மு­றை­யாக ஜப்­பா­னிய தற்­காப்­புப் படை­களும் பங்­கேற்­க­வுள்­ள­தாக ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கி‌ஷிடா சொன்­னார். அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களும் இப்­ப­யிற்­சி­யில் பங்­கேற்­கின்­றன.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அதி­க­ரித்து வரும் சீனா­வின் ஆதிக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு, அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் முயற்­சி­களை எடுத்­து­வ­ரும் நிலை­யில், ஜப்­பா­னும் தமது ஈடு­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தமது சீனப் பய­ணத்­திற்­குப் பிறகு இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, நேற்று ஜப்­பான் சென்று பிர­த­மர் கி‌‌ஷி­டா­வைச் சந்­தித்­தார்.

அதன் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த கி‌ஷிடா, "இந்­தோ­னீ­சியா, ஜப்­பா­னின் முக்­கிய கூட்­டாளியாகும். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்­தோ­னீ­சி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள கருடா கூட்டு ராணு­வப் பயிற்­சி­யில் ஜப்­பா­னி­யத் தற்­காப்­புப் படை­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளன," என்­றார்.

இந்­தோ­னீ­சிய அர­சாங்­கத்­திற்கு ஜப்­பான் 43.6 பில்­லி­யன் யென் ($442 மில்­லி­யன் வெள்ளி) கட­னாக வழங்­கு­கிறது என்­றும் கிஷிடா கூறி­னார். உள்­கட்­ட­மைப்பு திட்­டங்­கள், பேர­ழிவு தடுப்பு ஆகி­ய­வற்­றுக்­காக அது பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் கையெ­ழுத்­தாக உள்ள இந்­தோ­னீ­சிய-ஜப்­பான் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ ஒப்­பந்­தத்­தில் சில மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வர இரு நாடு­களும் ஒப்­புக்­கொண்­ட­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் விடோடோ குறிப்­பிட்­டார்.

வாழைப்­ப­ழம், அன்­னா­சிப்­ப­ழம், மாம்­ப­ழத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட உண­வுப்­பொ­ருள் போன்ற சில­வற்­றின் மீதான வரி­களை ஜப்­பான் குறைக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொண்­ட­தாக விடோடோ சொன்­னார்.

ஜப்­பா­னின் டொயோட்டா, மிட்­‌சு­பி‌ஷி ஆகிய கார் நிறு­வ­னங்­கள் இந்­தோ­னீ­சி­யா­வில் முத­லீடு செய்­ய­வுள்­ள­தாக அந்­நாட்­டின் பொரு­ளி­யல் அமைச்சு சொன்­னது.