ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து: 1½ லட்சம் பயணிகள் பாதிப்பு

ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து: 1½ லட்சம் பயணிகள் பாதிப்பு

1 mins read
9350153d-d297-4b2c-b235-468befb5b1db
படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் இன்று கிட்டத்தட்ட 1,000 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிச்றுவனம் லுஃப்தான்சா. ஜெர்மனி மட்டுமன்றி ஐரோப்பாவிலும் அதிகமான விமான சேவைகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம். பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.

உலகளவிலும் பிரசித்தி பெற்ற லுஃப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் லுஃப்தான்சா நிறுவனம் 1,000க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 1,34,000 பயணிகள் பாதிக்கப்பட்டன.