கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

1 mins read
b30259e0-9036-4e75-9639-91104b452181
-

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஜோ பைடனை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜோ பைடன் கொவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

"அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன," என்று அதிபரின் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.