மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்- அதிபர் ரணில்

மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்- அதிபர் ரணில்

1 mins read
0f7cca2d-2140-4638-a1e0-b00dfdc4feb3
-
multi-img1 of 3

இலங்கை: மக்கள் அமைதியான முறையின் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கோரியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அதிபர் பதவியில் இருந்த கோத்தபாய ராஜபக்சேவை பதவியில் இருந்து வெளியாக்கினர்.

இதையடுத்து புதிய அதிபராக நாடாளுமன்றம் மூலம் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். அவருக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களைக் காவல் துறையினர் அகற்றினர். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது என்றார் அவர்.