800,000 குரங்கம்மை தடுப்பூசிகளை அமெரிக்கா விநியோகம்

800,000 குரங்கம்மை தடுப்பூசிகளை அமெரிக்கா விநியோகம்

1 mins read
12ec168f-ca92-4470-a27f-13a374ba097b
-

கிட்டத்தட்ட 800,000 குரங்கம்மை தடுப்பூசிகளை விநியோகம் செய்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே நாட்டில் குரங்கம்மை தொற்றை எதிர்த்து போராடும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தடுப்பூசிகளின் பற்றாக்குறை முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.

ஆனால் இந்த புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு நம்புகிறது.

கடந்த மே மாதம் முதல் அமெரிக்காவில் 3,600 குரங்கம்மை தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுதான் உலகிலேயே ஆக அதிகமான எண்ணிக்கை கொண்ட நாடு.

தற்போது அமெரிக்க அதிகாரிகள் 7 மில்லியன் தடுப்பூசிகளுக்கு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர்.