உக்ரேன்- ரஷ்ய போரில் இறந்தோர், காயமடைந்த ரஷ்யர்களின் எண்ணிக்கை 75,000க்கும் மேல் என அமெரிக்கா கணித்துள்ளது.
இது முன்பு கணிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட மிகவும் அதிகம்.
உக்ரேனில் கிட்டத்தட்ட 150,000 ரஷ்ய துருப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டது. அப்படி என்றால் அவர்களில் பாதிப் பேர் தற்போது பணியில் இல்லை. இது மிகப் பெரிய இழப்பாகும்.
போர் தொடங்கிய நாள் முதலே இரு தரப்பும் தங்கள் பலி எண்ணிக்கையைக் குறைவாகவே வெளியிட்டு வருகின்றன.

