கட்சித்தாவல் தடுப்பு மசோதா நிறைவேறியது

கட்சித்தாவல் தடுப்பு மசோதா நிறைவேறியது

2 mins read
a4fe6b8d-e582-4f1b-a08b-a254001a9b00
-

மலேசிய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

கோலா­லம்­பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில், கட்­சித்­தா­வல் தடுப்பு மசோதா எந்த எதிர்ப்­பும் இல்­லா­மல் நிறை­வே­றி­யது.

இரண்டு நாள் விவா­தத்­துக்­குப் பின்­னர் அது நேற்று நிறை­வேற்­றப்­பட்­டது. ஆயி­னும் பெர்­சத்து கட்­சி­யைச் சேர்ந்த யாரும் அவ்­விவா­தத்­தில் பங்­கேற்­க­வில்லை.

மசோதா நிறை­வேற, மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தேவைப்­பட்ட நிலை­யில், 209 பேர் மசோ­தா­விற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். 11 பேர் வாக்­கெ­டுப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

சட்ட திருத்­தங்­களை இரு கட்­சிக் குழு பார்­வை­யிட்ட பிறகு, பிர­த­மர் இஸ்­மா­யில் புதன்­கி­ழ­மை­அன்று இதனை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார்.

உறுப்­பி­னர்­கள், தங்­க­ளது கட்சி­ யின் கொள்­கை­க­ளைக் கடைப் பிடிக்க வேண்­டும் என்ற செய்­தியை இந்த மசோதா தெளி­வு­ப­டுத்­து­வதாக பிர­த­மர் சொன்­னார்.

மலே­சி­யா­வில் சென்ற இரண்டு ஆண்­டு­களில் மூன்று அர­சாங்­கங்­கள் மாறி­விட்­டன. உறுப்­பி­னர்­கள் கட்சி மாறி­யதே அதற்கு முக்­கிய கார­ண­மா­கும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி மாறு­வதே, அர­சி­யல் நெருக்­க­டி­யை­யும் நிலை­யற்­ற­தன்­மை­யை­யும் ஏற்­ப­டுத்­து­கிறது.

எனவே, அவர்­கள் ஒரு கட்­சி­யில் இருந்து மற்­றொரு கட்­சிக்கு மாறு­வதை இச்­சட்­டம் தடுக்­கும். அர­சி­யல் கட்­சி­க­ளி­டையே நில­வும் குதிரை பேர நடை­மு­றையை இச்­சட்­டம் முடி­வுக்­குக் கொண்டு வரும்.

பிர­த­மர் இஸ்­மா­யி­லுக்­கும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்­கும் இடை­யி­லான உடன்­பாட்­டின் முக் கி­ய­மான நிபந்­த­னை­களில், கட்சித்தாவல் தடுப்­புச் சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தும் அடங்­கும்.

கட்­சித்­தா­வல் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் கட்சி மாறும்­போது மீண்­டும் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம்.

மேலும் பதவி வில­கும் உறுப்­பி­னர்­கள் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குத் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்ற தடை இனி கிடை­யாது. இது, கட்­சி­யில் இருந்து வில­கி­ய­வர்­கள் மீண்­டும் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வதற்கு வழி­வ­குக்­கும்.