பிரான்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 450 பேர் போராட்டம்

பிரான்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 450 பேர் போராட்டம்

1 mins read
4d4fe53d-8539-4e05-aa6d-043bcf2a8027
-

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கில் உள்ள அர்டேச் ஆற்று பகுதியில் புதன்கிழமையன்று காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியது. அது, ஒரே நாளில் கிட்டத்தட்ட 750 ஹெக்டர் பரப்பளவிற்குப் பரவியது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு சிறிய தொழிற்சாலைகளில் இருந்தவர்களும் அருகில் இருந்த கிராம மக்களும் வெளியேற்றப்பட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட

450 தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் நேர்ந்த காட்டுத் தீச் சம்பவத்தால், 20,000 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தீக்கிரையானது. படத்தில், பிரான்சின் கிக்நாக் நகரத்திற்கு அருகே பரவிய காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

படம்: இபி‌ஏ