விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
627e41c2-ef2c-461f-94e9-3a34d0c9a4a8
-

ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கையில் இருந்து இடமாற்றம்

கொழும்பு: இலங்கையில் நடத்தப்படுவதாக இருந்த இவ்வாண்டுக்காள ஆசியக் கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அங்கு இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன.

ஆனால் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் 6 நாடுகள் பங்கேற்கின்றன. அணிகளின் எண்ணிக்கை, எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இப்போட்டி இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் போட்டியை நடத்தும் உரிமை இலங்கையிடமே இருக்கும் என்று ஆசிய கிரிக்கெட் மன்றத்தின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்ளாதே‌ஷ் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு சிற்றரசுகள், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன.

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை ஒட்டுமொத்தமாக வென்ற இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில், முதல்முறையாக ஒட்டுமொத்தமாக வென்று வரலாறு படைத்தது இந்தியா.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் ஆட்டத்தில், பூவா தலையா வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்தது இந்திய அணி. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதையடுத்து, 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு 35 ஓவர்களில் 257 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 26 ஓவர்களில் 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது.