உடைந்து விழுந்த பாலம்; எட்டுப் பிள்ளைகள் மரணம்

உடைந்து விழுந்த பாலம்; எட்டுப் பிள்ளைகள் மரணம்

1 mins read
f8dd8b06-2183-47c9-9c32-a778d6817ab5
-

மணிலா: பிலிப்­பீன்­சில் பயன்­ப­டுத்­தப்­ப­டாத பாலம் ஒன்­றில் பிள்­ளை­கள் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, பாலம் உடைந்து, கீழே­யி­ருந்த ஆற்­றுக்­குள் பிள்­ளை­கள் விழுந்­த­னர். இதில் எட்­டுப் பிள்­ளை­கள் மாண்­டு­விட்­ட­னர். மேலும் ஐந்து பிள்­ளை­கள் காயம் அடைந்­த­னர்.

மணி­லா­விற்கு அரு­கே­யுள்ள டஸ்­ம­ரி­னாஸ் நக­ரத்­தில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று இந்த சோக சம்­ப­வம் நடந்­தது. இரண்டு நாள்­களுக்­குப் பிறகு, இமுஸ் ஆற்­றில் விழுந்த 12 முதல் 17 வயதுடைய பிள்­ளை­க­ளின் உடல்­களை மீட்­புக் குழு­வி­னர் மீட்­ட­னர்.