ஜொகூர் பாருவில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் வாகனத்திலிருந்து கைப்பை திருட்டுபோனது. வாகனத்தின் சன்னலை உடைத்து அதிலிருந்த கைப்பயையும் $200 ரொக்கத்தையும் திருட்டு நபர் எடுத்துசென்றார்.
பெயர் குறிப்பிடப்படாத கடைதொகுதியின் வாகன நிறுத்தும் இடத்தின் இரண்டாவது மாடியில் வாகன உரிமையாளர் தனது வோக்ஸ்வாகன் ரக வாகனத்தை நிறுத்தியுள்ளார். சுமார் ஒரு மணிநேரம் கழித்து வாகனத்தை வந்து பார்த்தபோது, அதன் சன்னல்கள் உடைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அருகில் இருந்த பாதுகாவல் அதிகாரி, திருட்டு சம்பவத்தை தடுக்க முயன்றதாகவும், திருடன் அவரை உதைத்ததாகவும் கூறப்பட்டது.
நல்ல வேளையாக, வேறொரு பையில் இருந்த தன்னுடைய கடவுச்சீட்டும் அடையாள அட்டையும் திருடப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் கூறினார். திருட்டு குறித்து மலேசிய காவல் துறையிடம் புகார் அளித்திருப்பதாக அவர் சொன்னார்.
ஜொகூருக்கு வாகனத்தை ஓட்டிசெல்பவர்கள் கவனமாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

