உலகின் ஆகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற ஒரு இளஞ்சிவப்பு வைரம் 300 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது.
'லுலோ ரோஸ்' என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த வைரத்தின் எடை சுமார் 170 காரட். ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
வைரங்கள் இந்த நிறத்தில் கிடைப்பது மிகவும் அரிது. 10,000 வைரக் கற்களில் ஒன்று மட்டும்தான் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதனால், இந்த குறிப்பிட்ட வைரம் மிகவும் சிறப்பானது என்று கூறப்பட்டது.
வைரம் ஏலத்துக்கு விடப்படும்போது, இதற்கு உயர்வான விலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கத்தில் ஏற்கெனவே சில பெரிய வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு 404 காரட் எடையுள்ள வைரக்கல் உட்பட, 100க்கும் அதிகமான காராட் எடையுள்ள 27 வைரங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கோலாவின் சுரங்கங்கள் உலகின் சிறந்த வைரங்களை உருவாக்குகின்றன.

