காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள். அந்த வரிசையில் தனக்கு பிறந்த குட்டியை பெருமையுடன் உலகத்துக்கு காட்ட விரும்பியது மனித குரங்கு ஒன்று.
கனடாவில் இருக்கும் விலங்கியல் தோட்டத்தில் உள்ள ஒரு கொரில்லா அண்மையில் ஒரு குட்டியை பெற்றேடுத்தது. தன்மை பார்க்க வந்தவர்களுக்கு தன்னுடைய குட்டியை அது பெருமிதத்துடன் காட்டியது. குட்டியை தூக்கி கொஞ்சுவதும், அதற்கு முத்தம் கொடுப்பதும் என்று பாசத்தை கொட்டித்தீர்த்தது.
தாய்க்கும் குட்டிக்கும் இடையே உள்ள பாசத்தை பார்த்தவர்க்ளுக்கு அளவில்லாத ஆனந்தம்.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 100,000 முறை காணொளி பார்க்கப்பட்டுள்ளது.
கொரில்லா தாய் அதன் குட்டி மேல் பாசத்தை பொழிவது மனிதர்கள் போன்றே இருப்பதாக பலர் கருத்துரைத்தனர். ஆனால் மிருகங்களை கூண்டில் அடைத்துவைப்பது இயற்கைக்கு மாறானது என்றும் அவை உல்லாசமாக காடுகளில் இருக்கவேண்டும் என்றும் ஒருசிலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

