இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் உள்ள அலெக்சாண்டர் அரங்கத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அதிரடியாகவும் அசத்தலாகவும் தொடங்கியது. கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடக்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றன. இந்தத் தொடக்க நிகழ்ச்சி அந்த ஏக்கத்தைத் தீர்த்துவைத்தது. 30,000 ரசிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட
1,500 பேர் கலைநிகழ்ச்சிகளைப் படைத்தனர். இருப்பினும், அனைவரையும் மனதைக் கொள்ளையடித்தது என்னவோ, 10 அடி உயர 'ரோபோ புல்' எனும் இயந்திர எருதுதான். ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில்,
72 நாடுகளைச் சேர்ந்த
ஐயாயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
படம்: ஏஎஃப்பி

