காமன்வெல்த் விளையாட்டுச் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டுச் செய்திகள்

1 mins read
113ad9f1-8556-4647-bad1-6991e829fd3c
-

 மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்தியா நிர்ணயித்த 155 என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 6 பந்துகள் எஞ்சியிருந்தபோது 157 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

 மேசை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தியது சிங்கப்பூர் குழு.

 ஆண்களுக்கான 'டிரையத்லான்' எனும் மூன்று வகை ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்தின் அலெக்ஸ் யீ, இவ்வாண்டு காமன்வெல்த் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர்

50 நிமிடம் 34 வினாடிகளில் போட்டியை முடித்தார்.

 குத்துச்சண்டையில் பாகிஸ்தானின் சுலைமான் பலோச்சை 5-0 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் சிவ தாபா காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறினார்.