ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரான்ஸ், சவூதி ஒப்புதல்

ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரான்ஸ், சவூதி ஒப்புதல்

1 mins read
8ce755ab-a487-44ca-9c56-06eac5a25c30
-

பாரிஸ்: பிரான்­சிற்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள சவூதி பட்­டத்து இள­வ­ர­சர் முக­மது பின் சல்­மான், அந்­நாட்டு அதி­பர் இமானுவல் மெக்ரோனைச் சந்தித்­தார்.

இச்­சந்­திப்­பின்­போது, "உக்­ரேன்-ர‌ஷ்யா சண்­டையை முடி­வுக்கு கொண்டு வர­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் ஐரோப்பா, மத்­திய கிழக்கு நாடு­களில் இப்­போர் ஏற்­ப­டுத்­திய விளை­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­குத் தங்­க­ளுக்­கி­டையே ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தை­யும் இரு­வ­ரும் ஒப்புக்­கொண்­ட­தாக," பிரான்ஸ் அதி­பர் மாளிகை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

உண­வுப் பாது­காப்பு, ஏமன் சண்டை, ஈரா­னின் அணு­வா­யு­தத் திட்­டம் உள்­ளிட்ட வட்­டா­ரப் பிரச்சி­னை­கள் குறித்­தும் பேசப்­பட்­

டது.

கச்சா எண்­ணெய் விலையைக் குறைக்க உத­வும் வகை­யில் சவூதி அரே­பி­யா­வின் எண்­ணெய் உற்­பத்­தியை அதி­க­ரிக்­கு­மாறு இள­வ­ ர­ச­ரி­டம் மெக்ரோன் வலி­யு­றுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­பர் மாளிகை அதி­கா­ரி­கள் பேச்­சு­வார்த்­தைக்கு முன்­னர் கூறி­னர்.