பொருளியல் வளர்ச்சி குறையும்

பொருளியல் வளர்ச்சி குறையும்

2 mins read
e813f52c-19f4-412c-b7c0-bb1afedc5e29
-

ஆசிய பசிபிக் வட்டாரம் குறித்து அனைத்துலக பண நிதியம் முன்னுரைத்தது

நியூ­யார்க்: ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தின் பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்பை 4.2 விழுக்­கா­டாக அனைத்­து­ல­கப் பண நிதி­யம் குறைத்­துள்­ளது. சென்ற ஏப்­ர­லில் முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தை­விட இது 0.7 விழுக்­காடு குறை­வா­கும். 2021ல் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தின் பொரு­ளி­யல் வளர்ச்சி 6.5 விழுக்­கா­டாக இருந்­தது.

2023ஆம் ஆண்­டிற்­கான வளர்ச்­சி­யும் 4.6 விழுக்­கா­டாக குறைத்து முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இது, முன்பு எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட 0.5 விழுக்­காடு குறை­வா­கும்.

உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு, சீனா­வின் பொரு­ளி­யல் மந்­த­நிலை, உல­க­ளா­விய வட்டி விகித அதி­க­ரிப்பு உள்­ளிட்­ட­வற்­றின் கார­ண­மாக பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்பு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

"அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி விகித அதி­க­ரிப்­பால் நில­வும் இறுக்­க­மான நிதி நிலைமை, உக்­ரேன்-ர‌ஷ்யா போரின் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள விலை­வாசி உயர்வு ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்பு குறைக்­கப்­பட்­டுள்­ளது," என்று நிதி­யத்­தின் ஆசிய, பசி­பிக் வட்­டார இயக்­கு­நர் கிருஷ்ணா சீனி­வா­சன் கூறி­னார்.

சீனா­வின் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யும் ஒன்று சேர்ந்­து­கொண்­டது என்­றார் அவர்.

சீனப் பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைப்பு, 4.4 விழுக்­காட்­டில் இருந்து 3.3 விழுக்­கா­டாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு வளர்ச்சி 4.6 விழுக்­கா­டாக இருக்கும் என்று நிதி­யம் எதிர்­பார்க்­கிறது. முன்பு கூறப்­பட்­ட­தை­விட இது 0.5 விழுக்­காடு குறை­வா­கும்.

சீனா­வின் கடு­மை­யான கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள், சொத்­துச் சந்தை சரிவு ஆகி­யவை பொரு­ளி­யல் வளர்ச்­சி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"பொரு­ளி­யல் வளர்ச்சி குறைந்து வரும் அதே வேளை­யில், விலை­வாசி அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் சீனி­வா­சன் சொன்­னார்.

இருப்­பி­னும், சில நாடு­களில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­ப­டு­வ­தால், வட்­டா­ரத்­தில் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் மீள் எழுச்­சிக்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தா­க­வும் நிதி­யம் சொன்­னது.

"உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் எழுச்சி காரணமாக மலேசியா, தாய்லாந்து, பசிபிக் தீவு நாடுகள் படிப்படியாக மீட்சி அடையத் தொடங்கியுள்ளது," என்று சீனிவாசன் கூறினார்.