பின்தங்கிய ரி‌ஷி சுனக்

பின்தங்கிய ரி‌ஷி சுனக்

1 mins read
9f888a88-8064-4aca-a63b-eb71517861c8
-

லண்­டன்: பிரிட்­டி‌ஷ் பிர­த­ம­ருக்­கான போட்­டி­யில் சக போட்­டி­யா­ள­ரான லிஸ் டிர­சை­வி­டத் தாம் பின்­தங்­கி­யி­ருப்­ப­தாக ரி‌ஷி சுனக் ஒப்புக்­கொண்­டுள்­ளார்.

கன்­சர்­வேட்­டிவ் கட்சி உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்ட நிகழ்ச்­சி­யில் பேசிய சுனக், "நான் பின்­தங்­கி­யி­ருப்­ப­தாக கருத்­துக்­க­ணிப்பு­கள் கூறு­வது எனக்­குத் தெரி­யும்," என்று தனது உரை­யைத் தொடங்கி, அனை­வ­ரின் ஆத­ர­வை­யும் அவர் கோரி­னார்.

விலை­வாசி குறை­யும் வரை, வரி­க­ளைக் குறைக்­க­மாட்­டேன் என்­ப­தில் இருந்த தன்­னு­டைய உறுதி, பொது­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை, என்று முன்­னாள் நிதி அமைச்­சர் சுனக் சொன்­னார்.

"இத­னால் எனக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருந்­தா­லும், உண்­மை­யைக் கூற­வேண்­டு­மென்­றால் இது­தான் நிலைமை," என்­றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "நிதி ஆதா­ர­மற்ற வரிக் குறைப்பு நட­வடிக்­கை­கள், பொறுப்­பற்­ற­தனச் செயல்," என்றார்.

நிகழ்ச்­சி­யில் பேசிய வெளி­யுறவு அமைச்­ச­ரான லிஸ் டிரஸ், பிரிட்­ட­னின் வரி அமைப்பை முற்­றி­லும் மறு­ஆய்வு செய்து, வரி­க­ளைக் குறைக்க நட­வ­டிக்கை எடுப்­பேன் என்­றார். அது மிக­வும் சிக்­க­லா­னது என்­றா­லும் மக்­க­ளுக்கு நியா­ய­மா­ன­தாக இருக்­க­வேண்­டும் என்­றார்.

தற்­காப்பு அமைச்­சர் பென் வாலஸ், டிரஸ்ஸிற்கு தனது ஆதரவளித்து பேசினார். டிரஸ் உண்­மை­யா­க­வும் நேர்­மை­யா­ன­வ­ரா­க­வும் இருந்­தார் என்றார் பென். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக டிரஸ் சொன்­ன­தைச் செய்­யக்­கூடி­ய­வர் என்­றும் அவர் சொன்­னார்.

அமைச்­ச­ர­வை­யில் இருந்து வெளி­யேறி, போரிஸ் ஜான்­ச­னின் ஆட்சி கவிழ்­வ­தற்கு கார­ண­மாக இருந்து ரி‌ஷி சுனக் தவறு செய்து­விட்­ட­தா­க­வும் பென் வால்ஸ் சொன்­னார்.