ஏவுகணைத் தாக்குதலில் 40 கைதிகள் மரணம்

ஏவுகணைத் தாக்குதலில் 40 கைதிகள் மரணம்

1 mins read
a7bc4264-c065-403d-89d1-b03851a8027e
-

கியவ்: ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் உக்­ரே­னிய போர்க்­கை­தி­கள் பலர் கொல்­லப்­பட்­ட­னர். இத்­தாக்­குதல் தொடர்­பாக ர‌ஷ்­யா­வும் உக்­ரே­னும் ஒன்­றை­ஒன்று சாடு­கின்­றன.

பிரி­வி­னை­வா­தி­க­ளின் பிடி­யில் இருக்­கும் டோனட்ஸ் பகு­தி­யில் உள்ள ஒனிவ்கா நகர சிறைச்­சாலை மீதான தாக்­கு­த­லில் 40 கைதி­கள் மாண்­டு­விட்­ட­னர், 75 பேர் காய­மடைந்­த­தாக ர‌‌ஷ்யத் தற்­காப்பு அமைச்சு சொன்­னது.

அமெ­ரிக்க தயா­ரிப்­பான ஹிமார்ஸ் ரக ‌ஏவு­க­ணை­க­ளைக் கொண்டு உக்­ரேன்­தான் இத்­தாக்கு­தலை நடத்­தி­ய­தாக ர‌ஷ்யா சாடு­கிறது.

இதை மறுத்­துள்ள உக்­ரேனிய ஆயு­தப் படை, ர‌ஷ்­யப் படை­கள்­தான் கவச எதிர்ப்பு வாக­னத்­தைக் கொண்டு தாக்­கி­ய­தா­கக் கூறு­கிறது.

"இதன் மூலம் ர‌ஷ்யா, உக்­ரே­னைப் போர்க் குற்­ற­வா­ளி­யாக்க பார்க்­கிறது.

"மேலும், கைதி­கள் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தை­யும் மரண தண்­ட­னை­களை­யும் இத்தாக்குதல் மூலம் ர‌ஷ்யா மறைக்க முயல்­கிறது," என்று உக்­ரே­னிய ஆயு­தப் படை அதிகாரி ஒருவர் சொன்னார்.

ர‌ஷ்­யப் பிரி­வி­னை­வாத தலை­வரை மேற்­கோள் காட்டி இன்­டர்­பேக்ஸ் வெளி­யிட்­டுள்ள செய்தி, சிறை­யில் 193 பேர் இருந்­த­தா­கவும் அவர்களில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்றும் கூறு­கிறது.