குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளான இருவர் பிரேசிலிலும் ஸ்பெயினிலும் மாண்டனர்.
முதன்முறையாக ஆப்பிரிக்க கண்டத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளானவர்கள் பலியாயினர்.
முதலில் பிரேசிலைச் சேர்ந்த குரங்கம்மைத் தொற்று ஏற்பட்ட 41 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (29 ஜூலை) மாண்டார்.
அதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்பெயினிலும் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

