ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் மலேசியாவிற்குச் செல்லும் பயணிகள் அந்நாட்டின் 'மைசெஜாத்தரா' செயலியில் பயண அட்டையை நிரப்பத் தேவையில்லை.
'மைசெஜாத்தரா', செயல்பாட்டில் சிங்கப்பூரின் 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் போன்றது.
தற்போதைய நடைமுறையின்படி மலேசிய விமான நிலையங்களில் 'மைசெஜாத்தரா' பயண அட்டையில் பயணிகள் தங்களின் சுகாதார விவரங்களை சமர்ப்பித்தது உறுதிசெய்யப்பட்ட பின்னரே அவர்கள் அந்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மலேசியாவிற்குள் வரும் பயணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவில் சுகாதார நிலவரம் கட்டுக்குள் இருப்பதால் இந்த விதிமுறை தளர்த்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

