இலங்கையில் பதவி விலகியுள்ள அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் இல்லத்தில் இரண்டு அதிகாரத்துவக் கொடிகளைத் திருடியதாகக் சந்தேகிக்கப்படும் ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அந்த ஆடவர் ஒரு கொடியை மெத்தை உரையாகப் பயன்படுத்துவதையும் மற்றொன்றை ஆடையாக அணிந்ததையும் கொண்ட காட்சிகள் பதிவான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சந்தேக நபர் ஓர் ஊழியரணித் தலைவர்.

