நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இதனால் நியூயார்க்கின்
ஆளுநர் கேத்தி ஹொச்சுல் அவசர
நிலையை அறிவித்துள்ளார்.
நேற்று முன்தின நிலவரப்படி நியூயார்க் மாநிலத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,400ஐ எட்டியுள்ளதாக திருவாட்டி ஹொச்சுல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள்.
அவசரநிலை மூலம் குரங்கம்மைப் பரவலை எதிர்கொள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குரங்கம்மைப் பரவலைத் தடுக்க இந்த நட
வடிக்கை பெரிதும் உதவும் என்று திருவாட்டி ஹொச்சுல் டுவிட்டரில் பதிவிட்டார்.
நியூயார்க்கிற்குக் கூடுதலாக 110,000 குரங்கம்மைத் தடுப்பூசிகளை அமெரிக்க அரசாங்கம் அனுப்பிவைக்கும் என்று சில நாள்
களுக்கு முன்பு அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
நியூயார்க்கிற்கு மொத்தம் 800,000 குரங்கம்மைத் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அவற்றில் 80,000 தடுப்பூசிகள் நியூயார்க் நகருக்கு அனுப்பிவைக்கப்படும். நியூயார்க் மாநில சுகாதாரத் துறைக்கு 30,000 தடுப்பூசிகள் அனுப்பப்படும்.
அடுத்த நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் தடுப்பூசிகள் நியூயார்க்கை வந்தடையும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
இம்மாத இறுதி நிலவரப்படி நியூயார்க் நகரில் 1,100க்கும் அதிக
மானோருக்கு குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 வயதுக்கும் அதிகமான ஆண்கள்.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.
நியூயார்க்கில் ஒரே பாலின உறவு கொள்ளும் ஆண்கள் பலருக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோர் உடலில் தடிப்புகளும் கொப்புளங்களும் ஏற்படுகின்றன. இவற்றின் மூலம் கிருமி பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் கடந்த 14 நாள்களில் ஒரே பாலின உறவு கொண்ட அல்லது பலருடன் பாலியல் உறவு கொண்ட ஆண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெறுகின்றனர். பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள குரங்கம்மை அறிகுறிகள் உள்ளவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
எச்ஐவி, தோல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று நியூயார்க் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

