லண்டன்: பிரிட்டனின் ரயில் சேவை ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நாட்டின் ரயில் சேவை நேற்று முடங்கியது.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பணவீக்கத்தைக் கண்டித்து கிட்டத்தட்ட 5,000 ரயில் ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு ரயில் ஓட்டுநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த புதன்கிழமையன்று சங்கத்தின் 40,000 உறுப்பினர்கள் பேரளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் பிரிட்டன் நேரப்படி நேற்று தொடங்கி இன்று காலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வாரயிறுதியில் ரயில் சேவைகள் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ரயில் சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
வேலை நிறுத்தப்
போராட்டத்தால் வெறிச்சோடி கிடந்த பிரிட்டிஷ் ரயில்
நிலையங்கள். கிட்டத்தட்ட அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
படம்: ஏஎஃப்பி

