கியவ்: உக்ரேனின் கெர்சோன் பகுதியில் நடந்த சண்டையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் பலர் மாண்டுவிட்டதாக உக்ரேனிய ராணுவம் நேற்று கூறியது.
அதுமட்டுமல்லாது, ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
நிப்ரோ ஆறு வழியாக கெர்சோனுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரைமியா, உக்ரேனின் கிழக்குப் பகுதிகள் ஆகியவற்றிடமிருந்து கெர்சோனில் உள்ள ரஷ்ய வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக உக்ரேன் கூறியது.

