உதவி தேவை என கதறும் கென்டக்கி

உதவி தேவை என கதறும் கென்டக்கி

1 mins read
e161d4fe-7c18-4dc1-96b7-64117bb88ca4
-

கென்டாக்கி: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.

இதுவரை குறைந்தது 25 பேர் மாண்டுவிட்டதாக மாநில ஆளுநர் தெரிவித்தார்.

வெள்ளத்தின் அளவு உயரக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களைப் பத்திரமாக வெளியேற்ற உதவி தேவை என்று கென்டக்கி மாநில அதிகாரிகள் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

மீண்டும் மழை பெய்து நிலைமை மோசமடைவதற்கு முன்பு மீட்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.